• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 4வது வார்டு திமுக வேட்பாளர் நாகேஷ்வரி வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகேஷ்வரி பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி 60 மாமன்ற உறுப்பினர் பதவிக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜுவன் ஆதரவோடு தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகேஷ்வரி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவருமான  காசிவிஸ்வநாதன், இன்று 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதில், முன்னாள் தூத்துக்குடி மேயர்கஸ்தூரி தங்கம், மாநில  பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன், வட்ட செயலாளர் சதிஷ் குமார், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட பிரதிநிதி தளவை ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் மணிராஜ், முத்துராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் உரிமம் பெறாத 11 டன் உப்பு பறிமுதல் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

தென்திருப்பேரை : வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

  • Share on