தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளர் ரெங்கசாமி போட்டியிடுகிறார்.
இதனையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எட்டயபுரம் ரோட்டில் உள்ள கட்சி காரியாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக ஆட்சியில் சாதனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகளையும் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.
அனைத்து நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தேர்தல் பொறுப்பாளர்கள் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி மாவட்ட செயலாளர் டிடிசி ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் ஜாகீர் உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்கடேஷன், மாயக்கண்ணன், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வக்குமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஷாஜகான், சிவகாமி, சுந்தரி, மரிய சேவியர், அபிராமி, செல்லையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்