தூத்துக்குடி மாநகராட்சியில் 47 வார்டுகளில் திமுக அதிமுக நேரடியாக மோதுகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் மொத்தம் 443 பேர் களத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக கூட்டணியில் திமுக 47 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுகவுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக ஆகியவை திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
அதேபோன்று அதிமுக சார்பில் 57 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரு வார்டில் தமாக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் திமுக அதிமுக வேட்பாளர்கள் 47 வார்டுகளில் நேருக்குநேர் களம் காண்கின்றனர். இதனால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.