• vilasalnews@gmail.com

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2500 போலீசார் பாதுகாப்பு - காவல் ஆய்வாளர்கள் மற்றும் ரோந்து வாகன காவல்துறை அதிகரிகளுடன் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

  • Share on

வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (09.02.2022) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் மொபைல் வாகன காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 16 மொபைல் வாகனங்களும், கோவில்பட்டி நகராட்சிக்கு 7 மொபைல் வாகனங்களும், காயல்ட்டினம் நகராட்சிக்கு 3 மொபைல் வாகனங்களும், திருச்செந்தூர் நகராட்சிக்கு 3 மொபைல் வாகனங்களும், ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஆத்தூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும்,  ஏரல் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், எட்டையாபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கழுகுமலை டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கானம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், கயத்தார் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், நாசரேத் டவுன் பஞ்சாயத்துக்கு இரண்டும், பெருங்குளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், புதூர் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், சாயர்புரம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், தென்திருப்பேரை டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும், உடன்குடி டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும் மற்றும் விளாத்திகுளம் டவுன் பஞ்சாயத்துக்கு ஒன்றும் ஆக மொத்தம் 48 மொபைல் வாகனங்களின் பொறுப்பாளர்களான 48 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 22 காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினருக்கு இன்று (09.02.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தேர்தல் நேரத்தின்போது அவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மணிமுத்தாறு மற்றும் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உட்பட 2500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேணியல் ஜேசுபாதம், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 24 வது வார்டில் மீன்களை வெட்டி விற்பனை செய்து திமுக வேட்பாளர் மெட்டில்டா டேனியல் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் 47 வார்டுகளில் திமுக - அதிமுக நேருக்கு நேர்!

  • Share on