• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 24 வது வார்டில் மீன்களை வெட்டி விற்பனை செய்து திமுக வேட்பாளர் மெட்டில்டா டேனியல் தீவிர வாக்கு சேகரிப்பு

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 24வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மெட்டில்டா டேனியல், தேர்தல் பிரச்சாரத்தின் போது மீன் விற்பனை கூட பகுதிக்கு சென்ற அவர், அங்குமீன்களை வெட்டி, வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தனக்கு ஆதரவு திரட்டினார்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 24வது வார்டுக்கு உட்பட்ட குரூஸ் புரம், பூபால ராயர் புரம், மீன் மார்க்கெட் தெரு, சத்யா தெரு, சந்தன மாரியம்மன் கோவில் தெரு, சேது ராஜா தெரு ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் மெட்டில்டா டேனியல் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, மீன் விற்பனை கூட பகுதிக்கு சென்ற திமுக வேட்பாளர் மெட்டில்டா டேனியல், மீன்களை வெட்டி, வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தனக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த பிரச்சாரத்தின் போது, மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், வட்ட தலைவர், வட்டச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு - திருநெல்வேலி சரக DIG தலைமையில் ஆலோசனை கூட்டம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2500 போலீசார் பாதுகாப்பு - காவல் ஆய்வாளர்கள் மற்றும் ரோந்து வாகன காவல்துறை அதிகரிகளுடன் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

  • Share on