நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (09.02.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், முக்கிய சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின் காவல்துறையினருக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்கணிகாப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திருச்செந்தூர் ஹர்ஷ்சிங் இ.கா.ப, தூத்துக்குடி நகரம் கணேஷ், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.