கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
"இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும்,கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன்” என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.
என கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமான இன்று (09.02.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட குற்ற பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயராம், நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, ஆறுமுகம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், நம்பிராஜன், அருணாசலம், காவேரி, சரஸ்வதி உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.