• vilasalnews@gmail.com

வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனம் : மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • Share on

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதிநடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட தேர்தல் அதிகாரியுமான செந்தில் ராஜ் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : பாஜக வேட்பாளர் மாரிச்சாமி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் - எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உறுதி மொழி எடுப்பு!

  • Share on