தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 17 வது வார்டில் பாஜக வேட்பாளர் மாரிச்சாமி வீடு வீடாக சென்று இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதனையடுத்து , தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து
இந்த நிலையில் இன்று ராஜீவ் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், காந்தி நகர், ஹரிராம் நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட 17 வது பொது வார்டில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மாரிச்சாமி, 17 வது வார்டுக்கு உட்பட்ட பால்பாண்டி நகர் நகரில் உள்ள பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!