தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நான்கு கடைகள் கோவில் பகுதியில் உள்ளது. கடந்த 1.7.2016 முதல் இந்த கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வரை 55 லட்சத்து 57 ஆயிரத்து 890 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உத்தரவின்பேரில் அறநிலையத்துறைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் சிறப்பு தாசில்தார் வதனாள் தலைமையில், சிவன் கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஆய்வர் ருக்மணி, வேம்படி இசக்கியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி சாந்தி தேவி மற்றும் பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று இந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.