தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியை மேம்படுத்த உங்களுக்காக உழைப்பேன் என திமுக வேட்பாளர் ரெங்கசாமி பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு, கே.டி.சி நகர், காமராஜ் நகர், ஓம்சாந்தி நகர், தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் டி.டி.சி.ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோருடன் இணைந்து பகுதி செயலாளர் சிவகுமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் ஜாஹிர்உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்டேசன், மாயக்கண்ணன், பாலசுப்ரமணியன், சங்கர சுப்ரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வகுமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், புனேராபிக்ஷன், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஜாஜகான், காளிமுத்து, சிவகாமி சுந்தரி, மரிய சேவியர், அபிராமி செல்லையா ஆகியோருடன் வாக்கு சேகரித்து வருகிறார்.
பின்னர் அவர் கூறியதாவது, 3வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதப்படி தரமான தார்சாலைகள் மற்றும் குறுகளான சந்து பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகளும் அமைத்து கொடுப்பதாகவும், முழுமையான கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுத்து எல்லா பகுதிகளுக்கும் மின்விளக்குகள் அமைத்து கொடுத்து அனைவருக்கும் நல்ல சுகாதாரமான சுத்தமான குடித்தண்ணீர் மற்றும் மக்கள் பிரச்சனைக்காக எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலன்தான் எனக்கு முக்கியம் என்று ஞாயிற்றுக்கிழமையும் கோட்டைக்கு சென்று பணியாற்றுவதை போல் நானும் பணியாற்றுவேன். பகுதிக்குட்பட்ட அனைவருடைய நலன்தான் எனக்கு முக்கியம் என்பதை உணர்ந்து கடமை உணர்வோடு பணியாற்றுவேன். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.