நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் 443 பேர் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், வருகிற பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 480 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 475 மனுக்கள் வேட்பு மனு பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும்.
இந்தநிலையில் திமுகவில் மாற்று வேட்பாளராக போட்டியிடுபவர், சுயேச்சைகள் ,அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என பலர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதில் மொத்தம் 32 வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்று நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் 443 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.