• vilasalnews@gmail.com

கடம்பூர் பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தல் ரத்து : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • Share on

கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

  • Share on

தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 60வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து அறிமுக செயல் வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் 443 பேர் போட்டி!

  • Share on