தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 60வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி 60வது வார்டு திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பாலகுருசாமியை ஆதரித்து கோயில்பிள்ளைநகரில் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டச்செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். வேட்பாளர் வழக்கறிஞர் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலின் போது இப்பகுதியில் முழுமையாக தேர்தல் பணி ஆற்றினார் பாலகுருசாமி,
தமிழகத்தில் டின்பிஎஸ்சி, சீருடை பணியாளர்கள், ஆகிய தேர்வுகளை தமிழில் எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று உத்தரவிட்டார்.
கடந்த காலங்களில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை தமிழகத்தில் தமிழ் மூலம் தேர்வு செய்யப்பட்டு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கி தமிழர்களுக்காகவும், தமிழ் நலனுக்காகவும் ஞாயிற்றுகிழமையிலும் கோட்டைக்கு வந்து முதலமைச்சர் பணியாற்றி கொண்டிருகிறார்.
10 ஆண்டுகளாக எதையும் ஓழுங்காக செய்யாத அதிமுக அரசுக்கு பாடம் புகட்டிட உள்ளாட்சியில் அரசுடன் இணைந்து பணியாற்ற நல்ல நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டும். அதற்கு நமது திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். என்று கூறினார்.
மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியுசி தலைவர் ராஜு, அம்பேத்கர் யூனியன் தலைவர் முருகன், பார்வர்ட் ப்ளாக் அமைப்பை சேர்ந்த நடராஜன், மாரிமுத்து, மருதபாண்டியன், சம்மேளன அமைப்பை சோந்த முத்துக்குமார் ராஜேந்திரன், கோ.பிள்ளைநகர் அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த காட்வின், சிவக்குமார், வீராஜான், செந்தில்குமார், மதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த அனல் செல்வராஜ், கார்த்திகேயன், இலக்கிய அணி மகாராஜன், மதிமுக மாணவரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் விநாயகமூர்த்தி, பிரம்மநாயகம், ஐஎன்டியுசி சர்தார், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, பொறியாளர் அணிசெயலாளர் முத்தையாபுரம் பகுதி தேர்தல் பொறுப்பாளர் அன்பழகன், துணைச்செயலாளர் சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், முருகராஜ், திமுக தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் ஜான் பிரான்சிஸ், தமிழ்ச்செல்வன், துரைபாண்டி, நம்பிராஜ், கந்தன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் ஜார்ஜ்புஷ், முத்தையாபுரம் பகுதி பிரதிநிதிகள் அனல் சக்திவேல், ராபின், முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி துணை செயலாளர் நலம் ராஜேந்திரன், மற்றும் ஆரோக்கியசாமி உள்பட பல்வேறு அணியை சார்ந்த நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.