தூத்துக்குடி 20வது வார்டு பகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி வாக்குறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி 20வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி டிஎம்சி காலனயில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. இந்த பகுதியில் அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருக்கின்ற அனைத்து நல்ல பணிகளையும் நான் முழுமையாக செய்து கொடுப்பேன். இப்பகுதியில் குடியிருந்து வருகின்ற நான் பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் அரசின் திட்டங்கள் முறையாக உங்களுக்கு கிடைத்திடவும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வரக்கூடியவன் எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக என்னை அற்பணித்து கொண்டு பணியாற்றுவேன் என்று மக்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.
அப்போது அப்பகுதி மக்கள் உற்சாகமாக மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பிரச்சாரத்தில் பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கிங்ஸ்டன், தங்கம்மாள், ராஜாமணி, லெட்சுமணன், ராஜ், வட்டச்செயலாளர்கள் நாராயணன், முனியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லி;ங்கராஜா, நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், ஜேஸ்பர், ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேஷ், ராஜா, பெரியசாமி, கதிரேசன், செல்லப்பாண்டி, மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, குமார், ஸ்டாலின், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் சரவணன் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.