தூத்துக்குடியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைத்து நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் சுப்ரமணியன் உள்ளிட்ட அணியின் மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மக்கள் சேவைகளை சிறப்பாக முன்னெடுக்கவும், கழக வளர்ச்சிக்காகவும் மற்றும் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின் படி நடந்த கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், ராம்குமார், பழனிக்குமார், அருணாதேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, பிரவீன் குமார், லெனின் குமார், சமூகவலைதள தொகுதி பொறுப்பாளர்கள் நாகராஜன், ஸ்ரீதர், ஹரிஹரன், பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கௌதம், மார்க்கின் இராபர்ட், மனோ, சரவணன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மனோகர், ஜோசப், வெங்கடேசன், கருப்பசாமி, பேரூர் ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்ட ஊராட்சி, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.