• vilasalnews@gmail.com

கீழ தட்டப்பாறையில் ஆடு திருடிய 2 பேர் கைது - திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

கீழ தட்டப்பாறை,  வடக்கு தெரு, ஆறுமுகநயினார் மகன் கொம்பையா (55) என்பவர் கீழ தட்டப்பாறை பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி அருகே ஆடு கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்த ஆட்டு கொட்டகையில் கடந்த 03.02.2022 அன்று ஆடு ஒன்று திருடு போயுள்ளது. இதுகுறித்து கொம்பையா தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேற்படி கொம்பையா அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தட்டப்பாறை வடக்குத்தெரு, பூல்காளை மகன் பூல்ராஜ் (21) மற்றும் தூத்துக்குடி டூவிபுரம், கருப்பசாமி மகன் சுப்பிரமணியன் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி கொம்பையாவின் ஆட்டை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து  பூல்ராஜ் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, ரூபாய் 15,000 மதிப்பிலான ஆட்டையும், திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் (TN 99 E 0147 TATA Indica ) பறிமுதல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அதிமுக வேட்பாளர்

தூத்துக்குடியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்: காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்

  • Share on