தூத்துக்குடி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அதிமுக வேட்பாளர் இளையராஜா
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதி 20வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, செல்வநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
செல்வநாயகபுரம் 1, 3வது தெரு, நந்தகோபாலபுரம் மேற்கு, உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
பொதுமக்கள் மத்தியில் அவர் கூறுகையில், 10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அதிமுக அரசுக்கு மிக்சரியான பாடம் புகட்ட வேண்டும். பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் அரசின் திட்டங்கள் முறையாக உங்களுக்கு கிடைத்திடவும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வரக்கூடியவர் எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக என்னை அற்பணித்து கொண்டு பணியாற்றுவேன் என்றார்.
பிரச்சாரத்தின் போது 12வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த இளையராஜா திடீரென நேற்று முன்தினம் மாற்றப்பட்ட அவர் திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி போட்டியிடும் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பகுதி முழுவதும் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் மாலை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
பிரச்சாரத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கிங்ஸ்டன், தங்கம்மாள், ராஜாமணி, லெட்சுமணன், ராஜ், இரவிந்திரன் வட்டச்செயலாளர்கள் நாராயணன், முனியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லி;ங்கராஜா, சமூக ஆர்வலர் ஐசக், நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், ஜேஸ்பர், ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேஷ், ராஜா, பெரியசாமி, கதிரேசன், செல்லப்பாண்டி, மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, குமார், ஸ்டாலின் சமூக வலைதள அணி செயலாளர் நாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.