தூத்துக்குடி 60வது வார்டு பகுதியை முன்மாதிரி வார்டாக மாற்றப்படும் என தி.மு.க வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி மக்களிடம் பிரசாரம்
தமிழகத்தில் வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், வடக்கு மாவட்ட தி.மு.க பகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் 60வது வார்டு பகுதியான அனல்மின் நகர், துறைமுகம் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, கோயில்பிள்ளை நகர், துறைமுகம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் அடங்கிய வார்டில் அனைத்து தரப்பினரும் குடியிருந்து வருகின்றனர்.
இவரின் தந்தை ஆறுமுகம் தி.மு.க நகர அவை தலைவராகவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மாவட்ட துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு பணியாற்றி வருகிறார். எளிமையை விரும்பும் குடும்பத்தை சார்ந்தவர். தந்தையின் எளிமையை திமுக வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி கடைப்பிடிப்பவர் இவர் ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக மாநகராட்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது போட்டியிட தலைமை கழகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
கட்சியின் மாணவரணி பொறுப்பிலிருக்கும் இவர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மாவட்ட கழகத்தில் உத்தரவிற்கிணங்க பணியாற்றி வருகிறார். தான் வெற்றி பெற்றதும் 60வது வார்டுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சாலை கால்வாய், மின்விளக்கு போன்ற குறைகளை முழுமையாக தீர்த்து வைப்பது மட்டுமின்றி அரசின் அனைத்து திட்டங்களையும் பகுதி மக்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக பாடுப்பட உள்ளார்.
இவரின் செயல்பாடுகள் மற்ற வார்டு உறுப்பினர்களை காட்டிலும் முன் மாதிரியாக அமையும். 60 வார்டுகளில் உள்ள கட்டமைப்பை விட தனது வார்டு பகுதி மக்களே நலன் காக்கும் வகையில் எந்த பணியாக இருந்தாலும், எப்பொழுதும் என்னை தொடர்பு கொள்ளலாம். பகுதி மக்களுக்காக முழுமையாக உழைப்பதற்கு அனைத்து தரப்பினரின் குறைகளை தீர்ப்பதற்கும் உங்கள் வீட்டு பிள்ளையாக நான் போட்டியிடுகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மட்டுமின்றி தி.மு.க கூட்டணி கட்சியினருடன் இணைந்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.