• vilasalnews@gmail.com

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  • Share on

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மாகராட்சி 20வது வார்டு திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர்கள் கிங்ஸ்டன், தங்கம்மாள், ராஜாமணி, லெட்சுமணன், ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலரும் வட்ட செயலாளருமான ரவீந்திரன் வரவேற்புரையாற்றினார்.

திமுக பொதுக்குழு உறுப்பினரும், 20வது வார்டு வேட்பாளருமான ஜெகன்பெரியசாமியை அறிமுகம் செய்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;  மக்கள் அனைவருக்கும் ஜெகன் பெரியசாமி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இப்பணி மேலும் தொடர்வதற்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

கடந்த 6 வருட காலமாக அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டது. மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின் பேரில் முறையாக திட்டமிடாமல் பல பணிகள் செய்யப்பட்டதால் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதை முறைப்படுத்தி செய்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளோம் அதை முழுமையாக நாம் செய்திட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளாட்சியில் 60 வார்டுகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது என்பதற்காக முதல்வர் அதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம். பதிவாகும் வாக்குகளில் அதிகமான வாக்குகள் கிடைக்க முழுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் முதல்வரின் சாதனைகளை எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

பின்னர், வேட்பாளர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தொடர் திட்டங்கள் மாநகரில் எல்லா பகுதிகளிலும் முழுமையாக கிடைத்திட 100 சதவீதம் நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் பேசுகையில்:  1986ல் நகர்மன்ற தலைவராக இருந்த பெரியசாமி இந்த மாநகர வளர்ச்சிக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினார். 3வது குடிநீர் திட்ட பணிகளை கொண்டு வந்தது மட்டுமின்றி இந்த பகுதியில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து புதிய பேருந்து நிலையத்தை அமைத்து உருவாக்கி கொடுத்தார். இது போல் பல சாதனைகள் உள்ளன. தந்தை எட்டடிபாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அது போல் எல்லா வகையிலும் வளர்ச்சிக்கும் ஜெகன் பெரியசாமி உழைப்பார். நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று

கூட்டத்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் கோபால், மண்டல தலைவர் சேகர், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாணவரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், இலக்கிய அணி நிர்வாகிகள் அனல்செல்வராஜ், மகாராஜன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கபரியேல்ராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணைச்செயலாளர் ஆபிரகாம், தொண்டரணி துணைச்செயலாளர்கள் ராமர், சரவணன், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மாநகர வக்கீல் அணி செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை அணி செயலாளர் சாத்ராக், வட்டச்செயலாளர்கள் நாராயணன், முனியசாமி, பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லி;ங்கராஜா, சமூக ஆர்வலர் ஐசக், நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், ஜேஸ்பர், ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேஷ், ராஜா, பெரியசாமி, கதிரேசன், செல்லப்பாண்டி, மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, மகேஸ்வரசிங், குமார், சமூக வலைதள அணி செயலாளர் நாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாநில அளவிலான ஜூடோ போட்டி: தூத்துக்குடி மாணவர் தங்கபதக்கம் வென்றார்

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் : வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

  • Share on