மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தூத்துக்குடி மாணவர் தங்கபதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மாநில அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர் மாணவர்களுக்கான 100 கிலோ எடைப்பிரிவில் முகில் மாறன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர், விரைவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணியினர் 3ம் இடத்தை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன், அணி மேலாளர் முத்து சங்கர் குமார், தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜயமோகன முரளி, பொது செயலாளர் முரளி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் வின்சென்ட், தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஜூடோ சங்கத்தின் செயளாலர் ராமலிங்க பாரதி, தலைவர் மாணிக்கராஜ், மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.