தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 45வது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர் பி.பி.ராமகிருஷ்ணன் இன்று, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் லெவிஞ்சிபுரம் 2 வது தெரு, சிவந்தாகுளம் 1வது, 2வது தெரு, பிரையண்ட் நகர் 9 முதல் 12 வது தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பொது பிரிவினருக்கான 45வது வார்டில் போட்டியிட திமுக சார்பில், திமுக பகுதி செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பி.பி.ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.