• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 20 வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் காலை முதலே பலரும் ஆர்வமுடன் மும்மரமாக விறுவிறுப்புடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 20 வது வார்டில் திமுக சார்பில் ஜெகன் பெரியசாமி  இன்று மாநகராட்சி அலுவலகத்தில், உதவி தேர்தல் அலுவலர் வித்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர். ஆனந்த சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்  கோட்டு ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்கே பிரதீப், இளைஞரணி மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர துணை அமைப்பாளர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆர்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சரும் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனின் உடன் பிறந்த சகோதரரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான  ஜெகன் பெரியசாமி திமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கு முன் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44 & 48 வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 60வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுருசாமி வேட்புமனு தாக்கல்

  • Share on