தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 39வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் என்பவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று ரெங்கநாத புரம் கிழக்கு, மேலர வீதி, வடக்கு ரத வீதி, வரதராஜபுரம், வடக்கு சம்மந்தமூர்த்தி தெரு, கீழ ரதவீதி, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பொது பிரிவினருக்கான 39வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட திருச்சிற்றம்பலம் என்பவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.