தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 31வது வார்டில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் கிதார் பிஸ்மி என்பவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று டூவிபுரம் மேற்கு 4 வது தெரு முதல் 11 வரை அண்ணா நகர் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பொது பிரிவினருக்கான 31வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கிதார் பிஸ்மி என்பவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆவார்.
மேலும், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூட்டணியில் திமுக வார்டு ஒதுக்கப்படாத நிலையில், இவர் தற்போது சயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.