• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மும்தாஜ் வேட்பு மனு தாக்கல்

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 38 வது வார்டில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் வேட்பாளர் மும்தாஜ்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் வியாழக்கிழமையான இன்று காலை முதலே பலரும் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 38 வது வார்டில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் வேட்பாளர் மும்தாஜ்  இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

  • Share on

தூத்துக்குடி 23வது வார்டு கவுன்சிலர் அறிமுக கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 31வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் கிதார் பிஸ்மி வேட்புமனு தாக்கல்

  • Share on