• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 23வது வார்டு கவுன்சிலர் அறிமுக கூட்டம்

  • Share on

தூத்துக்குடி 23வது வார்டு  வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் வரும் 19 அன்று நடக்க இருக்கிறது. தூத்துக்குடி 23வது வார்டு திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓதுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

அறிமுக கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் அழகுமுத்துபாண்டியன் தலைமை வகித்தார். 

திமுக வட்ட செயலாளர் சேகர், சிபிஎம் கிளை செயலாளர் அழகு பாண்டி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் தனலட்சுமியை அறிமுகம் செய்து வைத்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்கின்ற இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம் இப்பகுதியில் மழைகாலம் மட்டுமின்றி பொதுமக்களுக்காக நல்ல முறையில் பணியாற்றி வருகின்றார். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததை மக்களுக்கான திட்டங்கள் செயல்பாடுகள் முழுமையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் சென்றடைய வேண்டும் என்று கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு இணக்கமான உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதின் மூலம் நிர்வாகமும் நல்ல முறையில் நடைபெறும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் 60 வார்டுகளிலும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஓற்றுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், ஐஎன்டியுசி தொழிறசங்க தலைவர் ராஜு, காங்கிரஸ் சேவா தள தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் கோபால், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி குமார், அனைத்திந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் சந்தனசேகர், திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மும்தாஜ் வேட்பு மனு தாக்கல்

  • Share on