தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் செங்குட்டுவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்..
தூத்துக்குடியில் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் ஜோசப் செங்குட்டுவன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, அவருக்கு சக வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை, அவரது அலுவலகத்தில் நேரில் வாழ்த்து பெற்றார்.