தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான போட்டியில்ல் 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்!
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று மடத்தூர் பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர் , கல்லூரி நகர், திரவியரத்தின நகர், முருகேச நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பொது பிரிவினருக்கான 15வது வார்டில், திமுக சார்பில் போட்டியிட இசக்கிராஜா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் வித்தியாவிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.