• vilasalnews@gmail.com

தூத்துக்குடி திமுக கூட்டணி வேடப்பாளர்கள் சமுகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சமுகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

36வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயலெட்சுமிதுரை, வேட்பாளர்கள் ரூபவல்லி, ஜாக்குலின் ஜெயா, ரவீந்தரன், தெய்வேந்திரன், நாகேஸ்வரி, நிர்மல்ராஜ், பவாணி, இசக்கிராஜா, கண்ணன், ராமர், சோமசுந்தரி, ஜான்சிராணி, சரண்யா, கலைச்செல்வி, அதிர்ஷ்டமணி, கனகராஜ், கந்தசாமி, சுரேஷ்குமார், ரிக்டா, பேபிஏஞ்சலின், அன்னலட்சுமி, ராமகிருஷ்ணன், முத்துவேல், பாலகுருசாமி, வைதேகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் வேட்பாளர்கள் சாமுவேல் ஞானதுரை, தனலட்சுமி, எலிசபெத் ராஜன், எடின்டா, கற்பககனி, சந்திரபோஸ், பெனில், உள்ளிட்ட வேட்பாளர்கள் அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அனைவரும் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றி 60 வார்டுகளிலும் நாம் பெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும்.எல்லா வகையிலும் துணையாக மாவட்ட கழகம் இருக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொண்டரணி செயலாளர் ரமேஷ், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், முன்னாள் கவுன்சிலர் சங்கர், செல்வகுமார், ஜெயசிங். மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர இளைஞரணி துணை செயலாளர் செல்வின். மாவட்ட பிரதிநிதி கதிரேசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

  • Share on

தூத்துக்குடி 36வது வார்டு அ.தி.மு.க வேட்பாளராக களம் காணும் கலைச்செல்வி

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் : பாஜக சார்பில் 17 வது வார்டில் போட்டியிட மாரிச்சாமி வேட்பு மனு தாக்கல்

  • Share on