தூத்துக்குடி 36 வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் வேட்பாளராக கலைச்செல்வி போட்டி
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை அறிவித்தனர்.
அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக பகுதிக்குட்பட்ட மாநகராட்சி 36வது வார்டு அதிமுக வேட்பாளராக கலைச்செல்வி போட்டியிடுகிறார். அப்பகுதிக்குட்பட்ட போல்டன்புரம் மெயின் ரோடு ஒன்று முதல் மூன்று வரை பக்கிள்புரம் தொடர்ச்சி சுப்பையாபுரம் மெயின்ரோடு, மாசிலாமணிபுரம் ஒன்று முதல் மூன்று வரை ராமசாமிபுரம் 2வது தெரு, 3வது தெரு, பாளைரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளது.
இவரது மாமா முன்னாள் அதிமுக நகர அவைத்தலைவராகவும், சிதம்பரநகர் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் பெருமாள் பணியாற்றியுள்ளார். இவரது மாமியார் செல்வகனி 2001 முதல் 2006 வரை அப்பகுதியில் அதிமுக கவுன்சிலராக பணியாற்றியுள்ளார்.
இவரது கணவர் ஆறுமுகம் இவர் தூத்துக்குடி சிதம்பரநகர் கூட்டுறவு சங்கத்தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். வார்டுக்குட்பட்ட பகுதியிலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர், எளிமையானவர் முதல் எல்லோரும் எப்போதும் சந்திக்கக்கூடிய குடும்பத்தை சார்ந்தவர் அப்பகுயிலுள்ள அனைத்து தரப்பினரிடமும் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.
இவருக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி களப்பணியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.