தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது இதில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் அதிமுக, தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது .
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஎஸ் ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மகன் ஆவார்.
இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். மேலும், எஸ்.பி.எஸ் ராஜா வெற்றி பெற்றால் அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.