• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 49 வார்டில் கவுன்சிலர் பதவிக்கு களம் காணும் திமுக வேட்பாளர் வைதேகி

  • Share on

தூத்துக்குடி 49 வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் வைதேகி போட்டியிடுகிறார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் 49வது வார்டில் போட்டியிடும் வைதேகி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

அப்பகுதியிலுள்ள திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி பகுதி நிர்வாகிகளோடு இணைந்து திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்லி பிரச்சாரத்தை துவக்கியுள்ள வைதேகிக்கு அந்தோணியார்புரம், சத்தியா நகர், எம்.ஜி.ஆர் நகர், கோட்ஸ் நகர், செல்சீனி காலனி, கௌசல்யாபுரம், அருணா நகர், மீனவர் காலனி, ராஜபாண்டி நகர், கருணாநிதி நகர், பெரியசாமி நகர் ஆகிய பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இப்பகுதி திமுக வட்டச்செயலாளராக அவரது தந்தை மூக்கையா நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இவரது வெற்றிக்கு வடக்கு மாவட்ட திமுக கழகமும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். 

  • Share on

தூத்துக்குடி 40வது வார்டில் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்- சுயேட்ச்சை வேட்பாளர் கித்தெரியம்மாள் எட்வின் பாண்டியன்

முதல் முறையாக தேர்தலில் களம் இறக்கப்பட்டு அரசியல் வாரிசாக அடையாளம் காட்டியிருக்கும் எஸ்பிஎஸ்!

  • Share on