தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற கித்தேரியம்மாள் எட்வின் பாண்டியன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 40 வது வார்டில் மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 24 வது வார்டில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்று சாதனை படைத்த கித்தேரியம்மாள் எட்வின் பாண்டியன் மீண்டும் போட்டியிட புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 40வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாநகராட்சியில் 24ஆவது வார்டு ஆக இருந்தபோது எட்வின் பாண்டியன் முதல்முறையாக கடந்த 96 ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் நற்பெயரால் பெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
தொடர்ந்து, அந்த பகுதியில் மக்கள் பணியாற்றி வருவதால் நிரந்தர மாமன்ற உறுப்பினராக எட்வின் பாண்டியன் திகழ்கிறார்.
தொடர்ந்து பெண் வார்டாக மாற்றப்பட்டதால் அவரது மனைவி கித்தேரியம்மாள் எட்வின் பாண்டியன் தேர்வு செய்தனர்.
அந்தப் பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளான ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், வாரிசுசான்றிதழ், பிறப்பு, இறப்பு, சான்றிதழ் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து வரும் எட்வின் பாண்டியன் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை தையல் இயந்திரம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார். இது மட்டுமில்லாமல் கடந்த கொரோனா காலகட்டத்தில் வீடு வீடாக சென்று மக்களுக்கு முக கவசம் அரிசி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
தற்போது புதியதாக பனிமய மாதா பேராலயம், காந்திநகர், காரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 40வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த 40 வது வார்டில் மீண்டும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட கித்தேரியம்மாள் எட்வின் பாண்டியன் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தேர்தல் உதவி அலுவலர் சந்திரமோகனிடம் வழங்கினார்.
அப்போது எட்வின் பாண்டியன் உடனிருந்தார்.