• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்டபாளர் ஜெகன் பெரியசாமி

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்டபாளராக ஜெகன் பெரியசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி திமுக சார்பில் மாநகராட்சி பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

அந்த பட்டியலில் 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகனும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தம்பியுமான பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தன்பாடு உப்பு தொழிற்சங்க தலைவராகவும் மதுராகோட்ஸ் தொழிற்சங்க தலைவராகவும் லாரி உரிமையாளர் சங்க தலைவராகவும் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் மற்றும் கல்குவாரி புதிய பேருந்துநிலைய வியாபாரிகள் சங்க தலைவர் மட்டுமின்றி பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். வரும் 19ம் தேதி நடைபெறும் உறுப்பினர் தேர்தலுக்கு பின் 22ம் தேதி தேர்தல் முடிவும் அதன்பின் மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெறும் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் தமிழக தேர்தல் ஆணையத்தால் நடைபெறவுள்ளது.

அந்த தேர்தலில் மேயர் பதவிக்கான வேட்பாளராக ஜெகன் பெரியசாமி தலைமைகழகத்தால் அறிவிக்கப்பட்டு களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.

  • Share on

தூத்துக்குடி மேயர்... உச்சரிக்கப்படும் ஜோயல்... உறுதியாகுவது யார்?

தூத்துக்குடி 40வது வார்டில் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்- சுயேட்ச்சை வேட்பாளர் கித்தெரியம்மாள் எட்வின் பாண்டியன்

  • Share on