நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடி மாநகருக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் நகர உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டம்தோறும் தேர்தல் பணிக்குழுக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நியமித்துள்ளார்.
இதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவில், மாநில துணைத் தலைவர் ஏபி சிவி சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி, தனலட்சுமி, லைலா ரவிசங்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.