• vilasalnews@gmail.com

ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி பணத்தை இழக்கும் சிறுவர்கள் & இளைஞர்கள் : தவிர்க்க கோரி எஸ்பி பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

  • Share on

பொதுமக்கள் தங்களது பிள்ளைகள் மீது அடிக்கடி கவனம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தை திருடி செல்போனில் இணையதளத்திற்கு செலவு செய்து  “ஃப்ரீ ஃபயர்” போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடி வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் தங்களை அறியாமல் மூழ்கி தங்களது படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருகின்றனர். இது அவர்களது உடல் நலத்தையும், வாழ்க்கையையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். மேலும் இளைஞர்கள் உட்பட பலர் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் விளையாடி விட்ட பணத்தை பெற்றுவிடலாம் என்று மேலும், மேலும் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி தற்கொலை செய்து வருவதை அடிக்கடி செய்தித்தாள்களில் வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகவே பொதுமக்கள் தங்களது பிள்ளைகள் மீது அடிக்கடி கவனம் செலுத்தி இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் தங்களது பணத்தை இழக்காமல் இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடாமல் தவிர்த்து, நேரத்தை கல்வி மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்களது எதிர்காலத்தை நல்வழியில் கொண்டு சென்று நமது வீட்டிற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு தெரிவிப்பு!

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம்!

  • Share on