நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவனையும், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரனையும் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ரவி சேகர், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை மற்றும் சுந்தர் காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.