• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்நாளில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்!

  • Share on

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 414 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முதல் நாள் வேட்பு மனு தாக்கலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 60  மாநகராட்சி வார்டுகளும்,  81 நகராட்சி வார்டுகளும் , 273 பேரூராட்சி  வார்டுகளும் என மொத்தம் 414 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப் 19 தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

இதற்காக வேட்பு மனு தாக்கல் அந்தந்த நகர்புற, பேரூராட்சி  உள்ளாட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

இந்நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜன 28 ம் தேதியான இன்று துவங்கியது.  மொத்தம் உள்ள 414 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒருவர் மட்டும் முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்புமனு விநியோகம் தொடங்கியது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு தெரிவிப்பு!

  • Share on