• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்புமனு விநியோகம் தொடங்கியது!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்புமனு விநியோகம் தொடங்கியது!

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல்  தொடங்கிய நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் பலர் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி 18 பேரூராட்சி களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் 22 இடங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் வழங்கப்படுகிறது. மேலும், வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி வரும் 4ஆம் தேதி வரை நடக்கிறது. 5ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 7ம் தேதி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இன்று ( ஜனவரி 28 ) தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட பலர் காலை முதலே வேட்புமனுவை வாங்கிச் செல்கின்றனர்.

வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல்: பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்நாளில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்!

  • Share on