தூத்துக்குடியில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது!
தூத்துக்குடி மாநகர் முழுவதும் மாசு இல்லாத பசுமைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் மரக்கன்றுகள் நட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும் வழங்குகின்றனர். இந்நிலையில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி சுமதி, மற்றும் நீதிபதிகள் சாமிநாதன், ஹேமா, பிலிப்ஸ் நிக்லோஸ் அலெக்ஸ், பாண்டியராஜ், அணில்குமார், உமாமகேஸ்வரி, மாரீஸ்வரி, பாஸ்கர், அப்ரித் பேகம், உமாதேவி, ராஜாகுமரேசன், ஆகியோர் மரக்கன்றுகள் நட்டினார்கள்.
நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மையம் செயலாளர் பிரீத்தா மற்றம் மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், செங்குட்டுவன், சுகந்தன் ஆதித்தன், மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வக்கீல்கள் செல்வகுமார், ரமேஷ்பாண்டியன், பாலகிருஷ்ணன், எலிகட், சிசின்தர், எல்லம்மாள், பூங்குமார், மற்றும் மகேஷ்வரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.