73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ. உ.சிதம்பரனார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. பி.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிபி எம் மாநில க்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர் செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, எம்.எஸ்.முத்து, ஶ்ரீ நாத், மூத்த தோழர்கள் இசக்கி முத்து, குமாரவேல், மாநகர் குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், அலாசியஸ், மனோகரன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.