தூத்துக்குடியில் முருகப்பெருமான் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆறுபடை வீடு கொண்ட முருகனின் பக்தர்கள் திருச்செந்தூர், திருத்தனி, பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஆன்மீக அமைப்பின் சார்பில் முருகப்பெருமானின் 85வது குருபூஜையை முன்னிட்டு சைவ வேளாளர் மடத்தில் 1000க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தை முன்னாள் கவுன்சிலர் இசக்கியம்மாள், பொன்கசமுத்துபிள்ளை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், அதிமுக பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், வழக்கறிஞர் அணி துணைசெயலாளர் சரவணபெருமாள், தொழிலதிபர் ராஜ்குமார், பொன் லட்சுமணன், திமுக மாணவரணி துணைச்செயலாளர் சோமா, வட்டச்செயலாளர் கங்கா, மற்றும் மாரிமுத்து, கேபிள் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.