மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தேசியக் கொடியேற்றினார்.
73வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தியப்பின் இனிப்பு வழங்கி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் துணை தலைவர் தமிழ்செல்வி. ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மகேஷ்வரி, பாரதிராஜா, வசந்தகுமாரி, சக்திவேல், தங்கமாரிமுத்து, சேசு ராஜா, தங்கப்பாண்டி, பெலிக்ஸ், ஸ்டாலின், பாண்டியம்மா, பாத்திமாபீவி, பாலம்மாள், ராணி, கதிர்வேல். நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்