• vilasalnews@gmail.com

மொழிப்போர் தியாகிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

  • Share on

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் சார்பில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு  நடைபெற்றது.

மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் ராஜசேகர், வக்கீல் அணிசெயலாளர் சேகர், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைசெயலாளர் வலசை வெயிலுமுத்து, இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் தனராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன்,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், புல்டன் ஜெசின், துணைச்செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் பட்டுராஜா, வக்கீல்கள் முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், வட்டச்செயலாளர்கள் முருகன், மற்றும் அசோகன், உலகநாதபெருமாள், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் கொரோனா கட்டுப்பாடு மீறல் : 253 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருது - மத்திய அமைச்சர் வழங்கினார்!

  • Share on