• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டம் கொரோனா கட்டுப்பாடு மீறல் : 253 பேர் மீது வழக்கு பதிவு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (24.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 253 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று  (24.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 253 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று (24.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 186 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 100 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 34 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 13 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 58 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 79 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 15 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 42 பேர் மீதும் என மொத்தம் 527 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1,05,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். என கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை!

மொழிப்போர் தியாகிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

  • Share on