தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென தரையில் உருண்டு பிரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து என்பவரது மனைவி பியூலா மேரி.
தனது வீட்டின் அருகே தனி நபர்கள் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கரிமூட்டம் போடுவதால் ஏற்படும் புகையினால் அதன் அருகே வசித்து வரும் எனக்கு சுவாசித்தல் உள்ளிட்ட பல்வேறு கோளாறு ஏற்பட்டு விட்டது. எனவே இதன் காரணமாக எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே கரிமூட்டம் போடும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மனுவினை வளாகத்தின் முன்பு உள்ள மனு பெட்டியில் போடுமாறு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் அவரிடம் அறிவுறுத்தினர்.
ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து, நான் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று காவல்துறையின் தடுப்பை மீறி உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்துக் உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.