• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் நீதிபதி உட்பட நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் - அரசு சித்தமருத்துவப்பிரிவு சார்பில் வழங்கப்பட்டது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில், வேகமாக பரவி வரும் கொரோனா(ஒமிக்ரான்) தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இன்று விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி உட்பட நீதிமன்றப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதிமன்றப் பணியாளர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது  மீண்டும் ஏராளமான நாடுகளில் கொரோனா(ஒமிக்ரான்) 3-ம் அலை  பரவத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவிலும் தமிழகம் உட்பட கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிவேகமாக பரவி இறப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் கடந்த (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் அறிவித்தும் உத்தரவு பிறப்பித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பில், பொதுமக்களிடையே கொரோனா பரவல் குறித்து துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு  சார்பில், கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து முகாம் அமைத்து வழங்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இன்று விளாத்திகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் தமிழ் அமுதன் நீதிமன்ற பணியாளர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். 

இதனைத்தொடர்ந்து‌, நீதிபதி சரவணன் உட்பட நீதிமன்றப் பணியாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஜனார்த்தனன் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வுகளை அங்குள்ள பணியாளர்களுடன் எடுத்துக்கூறினார்.

  • Share on

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் - இந்து தேசிய கட்சியினர் கைது!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு பிரண்ட பெண்ணால் பரபரப்பு!

  • Share on