• vilasalnews@gmail.com

முத்தையாபுரத்தில் முறையாக சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகை!

  • Share on

முத்தையாபுரத்தில் முறையாக சாலை அமைக்க கோரி அப்பகுதிபொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தார்சாலை அமைக்கும் போது ஏற்கனவே இருந்த சாலையை முற்றிலும் அகற்றிய பிறகே தார்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

ஆனால் இதற்கு மாறாக தூத்துக்குடி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் பகுதியில் பழைய தார் சாலைக்குமேலேயே புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படும் மேலும் தார்ச்சாலை உறுதி தன்மையோடு இருக்காது என்பதால், இவ்வாறு தரம் அற்ற நிலையில் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு முறையாக சாலை அமைக்க வலியுறுத்தி மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் முத்தையாபுரம் பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களை சமரசப்படுத்திய தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள், இது தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், காங்கிரஸ் மஜீத், பிரபாகரன், தமிழர் விடியல் சந்தனராஜ் மார்க்சிஸ்ட்டு ராஜா, காளி, தேமுதிக நிர்வாகி பரமசிவம், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 637 பேருக்கு ரூ.1,27,400 அபராதம்!

  • Share on