• vilasalnews@gmail.com

பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை கைது!

  • Share on

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையர்காடு, சம்படி காலனிபகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் அய்யப்பன் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா (32) என்ற மனைவியும், செல்வ நரேஷ் (11), முருகவேல் (9), மற்றும் செல்வகணேஷ் (6) ஆகிய மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20.01.2022 அன்று அய்யப்பனுக்கும் அவரது மனைவி ரேகா ஆகிய இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் ரேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் நேற்று (21.01.2022) காலை தனது குழந்தைகளான செல்வ நரேஷ், முருகவேல் மற்றும் செல்வ கணேஷ் ஆகிய 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரேகா அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா  வழக்குப்பதிவு செய்து எதிரி அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

  • Share on

தூத்துக்குடியில் மாவட்டத்தில் முககவசம் அணியாத 433 பேருக்கு ரூ. 86,600 அபராதம் விதிப்பு!

தூத்துக்குடியில் கொலை மிரட்டல் - திருட்டு : 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

  • Share on